• Jul 25 2025

ரசிகர்களிடம் அந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்ட நடிகை சமந்தா.! இதான் அந்த விஷயமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை சமந்தாவும் காதல் கதையான ‘குஷி’ திரைப்படத்துக்காக ஒன்றாக  இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  படக்குழு ஏற்கனவே காஷ்மீரில்இப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்தார்.

இதற்கிடையில்  படத்தின் ஷூட்டிங்கின் போது, விஜய் தேவரகொண்டாவுக்கு சிறிய விபத்து ஏற்பதால் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டது. அப்போதிருந்து, ‘குஷி’ படம் குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன.



இதற்கு நடிகை சமந்தா அவரது பதிவில், குஷி விரைவில் மீண்டும் தொடங்கும், தேவர்கொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். முரளி சர்மா, ஜெயராம், சச்சின் கேடகர், சரண்யா பிரதீப், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தத் திட்டத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.எனப்து குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement