• Jul 25 2025

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டும் AK 62 படக்குழு.. பட்ஜெட் மட்டுமே இவ்வளவு என்றால்.. சம்பளம்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

எச்.வினோத் இயக்கத்தில் மற்றும் அஜித் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியானகி இருந்தது. அதாவது பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி வெளியான இப்படமானது விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்று வருவதோடு வசூலினையும் வாரிக் குவித்துள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' இல் நடிப்பார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதாவது கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு அஜித் கோரியும் விக்னேஷ் சிவன் செய்யாததால் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து ஏகே 62 படத்தை தடம் படத்தின் இயக்குநரான மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இவ்வாறு 'ஏகே 62' படத்தில் அதிரடியாக மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற இந்த நேரத்தில் தற்போது மற்றுமொரு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


அதாவது இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய கதை அஜித்துக்கு ரொம்பவே பிடித்து போனதாகவும், இதனால் பெரிய சம்பளத்தை கொடுத்து மகிழ் திருமேனியுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஏகே 62 திரைப்படம் 220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அத்தோடு ஏகே 62 படத்திற்காக நடிகர் அஜித்துக்கும் லைகா நிறுவனம் பெரிய தொகையை சம்பளமாக பேசி அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement