• Jul 25 2025

சினிமாவை விட்டு வெளியேற முடிவெடுத்த நடிகை சமந்தா...சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..வெளியானது காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில்  திருமண வாழ்வில் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் காரணமாக இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தங்கள் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். இவ்வாறுஇருக்கையில்  சமந்தா சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பற்றி இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் ஒன்று போட்டு இருந்தார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றியும் மனம் உருகி தெரிவித்திருந்தார்.

எனினும் அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதலை கூறி வந்தனர். 

இதற்காக சிகிச்சை பெற்றும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டும் வந்துள்ளார் சமந்தா. எனினும் தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தென் கொரியா நாட்டிற்கு சென்று சிகிச்சையும் பெறவிருக்கிறாராம்.

இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்ததால் படங்களில் தற்போது நடிக்கப்போவதில்லை என்ற முடிவை சமந்தா எடுத்துள்ளாராம். அத்தோடு வரும் ஜனவரி மாதம் தான் கமிட்டாகி டேட் கொடுக்கப்பட்ட குஷி படத்தினை முடித்து விட்டு நீண்ட ஓய்வினை எடுக்கவுள்ளாராம் சமந்தா. அந்த நோயில் இருந்து எப்போது சரியாக மீண்டு வருகிறாரோ அப்போது தான் கமிட்டான படங்களுக்கு டேட் கொடுப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.


Advertisement

Advertisement