• Jul 24 2025

முதலிடத்தில் விஜய்யும் இல்லை... அஜித்தும் இல்லை... அப்போ யார் இருக்காங்க தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் எப்போதுமே முன்னணி ஹீரோவாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. அஜித், விஜய் எந்தளவிற்கு ஒற்றுமையாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழமை. 


இந்நிலையில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' மற்றும் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இதனால் இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாகவே எந்த படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற பஞ்சாயத்து சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபமெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது திரையரங்குகளிற்கு முன் பேனர் வைப்பதிலும் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. 


அத்தோடு சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் 1 என்று பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தான் தற்போது பிரபல டிக்கெட் புக்கிங் தளமான புக்மை ஷோ 2022 இல் அதிகம் தங்களுடைய தளத்தில் புக் செய்யப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து லிஸ்ட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எப் படம் உள்ளது.

1.கே.ஜி.எப்

2.ஆர்.ஆர்.ஆர்

3.காந்தாரா

4.தி காஷ்மீர் பைல்ஸ்

5.பொன்னியின் செல்வன்

6.பிரம்மாஸ்திரா

7.விக்ரம்

8.திரிஷ்யம் 2

9.Bhool Bhulaiyaa 2

10.டாக்டர் ஸ்ட்ரேஞ் 2

இவ்வாறாக இந்த ஆண்டில் மாபெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருந்த விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தும், இந்த டாப் 10 லிஸ்டில் இருவரும் முதலிடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement