தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, சமீபகாலமாக பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். சமந்தா நடிக்கும் படம் என்றாலே அது ஹிட் தான், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.



சமீபத்தில் நடிகை சமந்தா, விஜய் தேவர் கொண்டாவுடன் நடித்து கடந்த மாதம் வெளியான குஷி படம் ரசிகர்களிடத்தே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தசை அலற்சி நோயிலிருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, துபாயில் இருக்கும் ஒரு நகை கடையை திறக்க படுசூடான கிளாமர் ஆடையில் வந்திருக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் வாயைப்பிளந்து வருகின்றனர்.

Listen News!