• Jul 25 2025

லியோ ட்ரெய்லர் எல்லாம் பக்கா பிளான்! இது பிரமோஷன் யுக்தியா? வெடித்தது பூகம்பம்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாகவே லியோ ட்ரெய்லர் விவகாரம் தான் மீடியாவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதில் வன்முறை உச்சகட்ட வன்முறை இருந்தது என கூறினாலும் ஒருபுறம் விஜய் கெட்ட வார்த்தை பேசியது ஒட்டுமொத்த ஆடியன்ஸ்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. ட்ரெய்லரிலையே இப்படி இருந்தால் படத்தில் இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ என சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியநிலையில் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். 


நான் கட்டாயப்படுத்தி தான் விஜய்யை அந்த வார்த்தையை பேச சொன்னேன். அதனால் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இந்த விடயம் பேசப்பட்டுக் காெண்டே இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில்  பேசப்பட்ட அந்த வார்த்தை ட்ரெய்லரில் இருந்து தற்போது மியூட் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்தாலும்  அடுத்த ஒரு பூகம்பம் வெடித்திருக்கின்றது.


இந்த விஷயத்தை படக்குழு முன்னரே செய்திருக்கலாமே  அதை விட்டுவிட்டு ஊரையே கலவரமாக்கி மியூட் செய்திருக்கிறார்கள் என்றால் எல்லாமே பக்காவாக ப்ளான்  என்ற கருத்தும் தற்போது வெளியாகி வருகின்றது. இது பிரமோஷன் யுக்தியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement