• Jul 25 2025

நோயால் அவதிப்படும் நடிகை சமந்தாவை வம்புக்கு இழுத்த சீமான்- செம கடுப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், உங்களுக்கு திராவிட மாடல் ஆட்சினு சொல்றதுக்கு கூட கூச்சமாக இருக்கிறது. தமிழர் ஆட்சி என்றாவது சொல்ல வேண்டும் அதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.

திராவிடர் ஆட்சினு கூட சொல்ல முடியல, திராவிட மாடல் ஆட்சினு சொல்றீங்க. மாடல் என்ன என்பதற்கு உங்களுக்கு சாம்பிள் சொல்கிறேன். உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என கேட்கும் சமந்தா ஒரு மாடல், ரம்மி விளையாடுங்க, பணத்த அள்ளுங்க அப்படிங்கிறது ஒரு மாடல். கட்டு கம்பி விற்கிறவங்க ஒரு மாடல் அது மாதிரி என்றார்.


மேலும் விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. கார்த்தி, சூர்யா, சிம்பு உள்ளிட்டவர்களுக்கு பிரச்னை வரும்போது நான் பேசியுள்ளேன். ரசிகர் மன்றத்தை வைத்து நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. நான் நேரடியாக மக்களை சந்தித்து படையைத் திரட்டினோம்.

சூப்பர் ஸ்டார் என்பது பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே எனப் பேசினார்.இந்த விடயம் சமந்தா ரசிகர்களை மிகவும் கோபமடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement