• Jul 26 2025

மேடையில் மீனாவின் அம்மாவால் அவமானப்பட்ட அஜித்! என்ன பண்ணாரு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  திகழ்ந்து வருபவர்  நடிகர் அஜித்குமார் .இவரின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. ஆரம்பகால அஜித் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அவமானங்களை சந்தித்து இப்படியொரு இடத்தினை பெற்றுள்ளார்.

தன்னைத்தானே செதுக்கி யார் துணையும் இல்லாமல் பல கோடி ரசிகர்கள் தன் பக்கம் வைத்துள்ளார். அஜித் தனக்கு உதவ வேண்டும் என்று வருபவர்களுக்கு உதவக்கூடியவராக திகழ்வார். அப்படி அந்த சூழலில் இருக்கும் போது நடிகை மீனாவின் அம்மா மேடையில் அஜித்தை அவமானப்படுத்திய விஷயம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித்துடன்  நடித்துள்ளார். அப்போது அஜித்தை விட பெரிய மார்க்கெட்டை கொண்டவர் மீனா என்பது தெரிந்த ஒன்று. அப்படியொரு சூழலில் அஜித்திற்கு மீனா ஒரு விருதுவிழாவில் அஜித்திற்கு விருது வழங்கியிருக்கிறார்.




அப்போது அஜித்துடன் நடனமாட கேட்டிருந்தனர். அதை கேட்டதும் மேடையின் கீழ் அமர்ந்திருந்த மீனாவின் அம்மா உடனே அழைத்துச்சென்றுவிட்டாராம். ரஜினி, கமல் என நடித்து வரும் என் மகள் இவருடன் நடனமாடுவதா என்று அவமானப்படுத்தும் வண்ணம் மீனாவை கூட்டிச்சென்றிருக்கிறார்.

ஆனாலும் நடிகர் அஜித் ,அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாத அஜித், வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் மீனாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். தன்னை அவமானப்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமலும் ,மனதில் வைக்காமலும் இப்படியொரு நல்ல பெரிய மனசை காட்டியிருக்கிறார்.

Advertisement

Advertisement