• Jul 27 2025

கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை.. தரதரவென இழுத்துச் சென்ற கணவர்... விளக்கமளித்த நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று தான் சிலம்பாட்டம். இப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனா கான். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து இருக்கின்றார்.


இதனையடுத்து அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார். பின்பு அதே மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை 2020-இல் திருமணம் செய்துகொண்டார்.


பின்னர் சினிமாவை விட்டு விலகினாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் டச்சிலே இருக்கிறார் சனா கான். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சனா கான் மும்பையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் சனா கானை அவரது கணவர் அனஸ் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் படு வைரலாகின. இதனைப்பாரத்த நெட்டிசன்கள் பலரும் கர்ப்பமான மனைவியை இப்படியா அழைத்து செல்வது என கண்டனங்கள் தெரிவித்தனர். 


இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக சனா கான் தற்போது அளித்துள்ள விளக்கத்தில் "நாங்கள் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் கார் டிரைவரை அழைக்க முடியவில்லை. இதனால் வெகு நேரமாக அங்கு காத்திருந்தால் அசெளகரியமாக உணர்ந்தேன். இதனால் தண்ணீர் குடிக்கவும், காற்று வாங்கவும் என்னை அங்கிருந்து அவசரமாக காருக்கு அழைத்து சென்றார் என் கணவர். எனக்காக கவலைப்பட்டத்திற்கு நன்றி" எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை சனா கான்.

Advertisement

Advertisement