• Jul 25 2025

அந்தமாதிரியான காட்சியில் நடித்தது குறித்து மனம் திறந்த விடுதலை பட நடிகை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த விடுதலை படம் மார்ச் 31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. 

விடுதலை படத்தில் தென்றல் ரகுநாதன் ஆடையில்லாமல் நடித்த காட்சி குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இந்நிலையில் அந்த காட்சியில் நடித்தது பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார் தென்றல்.

அந்த பேட்டியில் தென்றல் கூறியதாவது,

வெற்றிமாறன் சார் செங்கல்பட்டில் படப்பிடிப்பில் இருந்தார். இரவு 7 மணி அளவில் அவரை சந்தித்து பேசினேன். சரிமா சொல்றேன், வந்துடுங்க என்றார். வசனம் பேசுங்க என்று எல்லாம் சொல்லவில்லை. மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.நான் கதை, கதாபாத்திரம் பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால் இது வெற்றிமாறன் சாரின் படம்.

காவல் நிலைய காட்சி என்றார்கள். ஆனால் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லவில்லை. ஸ்பாட்டில் தான் கூறினார்கள். கதைக்கு தேவைப்படுகிறது. அதனால் அப்படி நடிக்கிறோம் என்று தோன்றியது. ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வு இருந்தது.

நான் ஒன்றும் ஆடையில்லாமல் நடிக்கவில்லை. சிஜியில் எடிட் பண்ணி தான் அந்த மாதிரியான காட்சிகளை காண்பித்தார்கள். அப்படி நடிக்கிறோமே என தயக்கமாகவோ, பயமாகவோ இல்லை. கதைக்கு தேவைப்பட்டது.நான் தான் ஹீரோயினின் அம்மா என்பதே எனக்கு தெரியாது. டப்பிங்கின்போது தான் தெரியும் என்றார்.

Advertisement

Advertisement