• Jul 24 2025

பார்த்தி-காவியா திருமணத்தை நிறுத்த மாஸ்டர் பிளான் போட்ட ரம்யா.....பரபரப்பு திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே சீரியல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. 

அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ரம்யா தனது தாயை பேசுகின்றார்.உன்னை நம்பினால் வேலைக்கு ஆகாது இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை நானே பார்த்து கொள்கின்றேன்.

இதன் பின்னர் காவியாவும் ஜீவாவும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் முதல் காவியாவின் லாப் டப்பில் இருந்து ரம்யா பெற்றுக்கொண்டார்.ஆனால் ரம்யா இவ்வாறு செய்யும் போது பார்த்தி அதனை எல்லாவற்யும் டிலீட் செய்து விடுகின்றார்.ஆனால் பார்த்திக்கு அதில் இருக்கும் புகைப்படம் காவியாவினுடையது என்று நினைத்தே டிலீட் செய்தார்.ஆனால் அதில் ஜீவாவும் இருப்பது பார்த்திக்கு  தெரியாது.

இவ்வாறு இருக்கையில் அந்த லாப் டாப்பை கடைக்கு கொண்டு போய் அந்த போட்டோஸ் அனைத்தையும் திரும்ப பெற்றுவிடுகின்றார்.இதனை அப்படியே கொண்டு போய் பார்த்தியிடம் காட்ட முற்படுின்றார் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது.அடுத்து பார்த்திக்கு உண்மை தெரியவருமா..என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement