• Jul 25 2025

40 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவிற்கு இத்தனை கோடி சொத்தா...? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

த்ரிஷா என்று கூறுவதை விட குந்தவை என கூறுவது இப்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பெயராக திகழ்கின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி குந்தவையாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இன்று மே 4, நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள், 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.

அதன்பின்னர் அவரது பயணம் எல்லாமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அத்துப்படி. சரி 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு, புதுப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் போன்ற விவரங்களை காண்போம்.

அத்தோடு பொன்னியின் செல்வன் படத்தில் அழகான இளவரசி குந்தவையாக நடிக்க அவர் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றாராம்.எனினும்  அதேபோல் விஜய்யுடன் ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்.

மாதம் ரூ. 60 லட்சம், ஆண்டுக்கு ரூ. 9 கோடி வரை த்ரிஷா விளம்பரங்கள், படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தெரிவிக்கின்றன.அத்தோடு  சென்னையில் ரூ. 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு, ரியல் எஸ்டேட் மூலமும் சம்பாதிக்கிறாராம்.

இவ்வாறுஇருக்கையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், ரூ. 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார்கள் திரிஷாவிடம் உள்ளன.

மொத்தமாக நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement