• Jul 25 2025

அந்த பழக்கத்தின் மீது பைத்தியமான நடிகை.. திருத்த முடியாமல் துரத்தி விட்ட கணவன்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்  ஒருவர் வயதானாலும் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சில படங்களில் வந்தார். ஆனால் தன்னுடைய கெட்ட பழக்கத்தினால் இப்போது மார்க்கெட்டை இழந்து உள்ளார்.

அதாவது கணவருக்கு கோடிகளில் சம்பளம் என்பதால் ஆடம்பரமாக செலவு செய்து வாழ்க்கையை சீரழித்து வருகிறார். அடிக்கடி பார்ட்டி, போதை என சுற்றி திரிகிறாராம். சம்பாதித்த காசு எல்லாம் இவ்வாறு கரியாக்கி வந்தாலும், தனது உடம்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் போதைப் பொருட்களையும் பயன்படுத்தி வருகிறார்.

மேலும் நடிகை ஏகப்பட்ட தொழில் செய்து அதிலும் நஷ்டத்தை சந்தித்து உள்ளார். இவ்வாறு சென்ற இடமெல்லாம் சருக்களை சந்தித்து, குடிக்கும் அடிமையாகி உள்ளதால் கணவர் மிகுந்த கவலையில் உள்ளாராம். இந்த பழக்கத்திலிருந்து மனைவியை எப்படியாவது மீட்டு விடலாம் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

மேலும் நடிகையால் தற்போது அவரது மகனும் கொஞ்சம் கொஞ்சமாக கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறாராம். இதனால் பயந்து போன நடிகர் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்பதால் மனைவியை தண்ணீர் தெளித்து விட்டாராம். இதனால் மனைவி நடிகை நிற்கதியாக நிற்கிறாராம்.

இப்போது கணவரின் சம்பாத்தியமும் அவருக்கு கிடைக்காததால் மது குடிக்க முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் உள்ளாராம். இவர் கணவர் சொல்லை கேட்டு நடந்து இருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது, அவரும் சந்தோசமாக இருக்கலாம் என நடிகையின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement