• Jul 26 2025

எல்லை மீறிய ஆபாச காட்சிகள்.. மரியாதையை அவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. நடிகை விஜயசாந்தி ஆதங்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் நிறைந்து இருப்பதாகவும், அவை எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோர் நடித்து ஓ.டி.டி.யில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரில் எல்லை மீறிய ஆபாச காட்சிகள், படுக்கை அறை, இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. 


அதிலும் குறிப்பாக பிரபல நடிகர்களாக இருக்கும் வெங்கடேஷ், ராணா ஆகியோர் இதுபோன்ற தொடர்களில் நடிக்கலாமா என்று திரைப்பிரபலங்கள் உட்படப் பலர் கண்டித்து உள்ளனர். இந்த வரிசையில் தற்போது நடிகை விஜயசாந்தியும் இணைந்துள்ளார்.

அதாவது இது பற்றி அவர் விமர்சித்துக் கூறும்போது, "சமீபத்தில் வெளியான வெப் தொடரில் ஆபாச காட்சிகள் ஏராளமாக உள்ளன. மேலும் ஓ.டி.டி.யில் வரும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் அதிகமாகி வருகின்றன. இதனால் பெண்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்து படம் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். 


அதுமட்டுமல்லாது "ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகளும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பாதித்தால் போதும் என்ற நோக்கம் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வைத்திருக்கும் மரியாதையை அவர்களே காப்பாற்ற வேண்டும். ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிகிறது'' எனவும் கூறி இருந்தார் விஜயசாந்தி.

Advertisement

Advertisement