• Jul 25 2025

லண்டனிற்கு பறந்த ஏ.ஆர்.ரகுமான்...ஓ..இது தான் விஷயமா..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

 இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே  ஆரம்பமாகி விட்டன. அதன்படி நேற்று இப்படத்தின் முதல் பாடலான அக நக என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொன்னியன் செல்வன்-2 படத்தின் இசையமைப்பு பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமான் லண்டன் சென்றுள்ளார்.அதனை ஏ.ஆர்.ரகுமான் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து புகைப்படப்படம் வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement