• Jul 24 2025

தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டு மாற்று மொழி படங்களை தேடி ஓடும் நடிகைகள்

ammu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையில் சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்கள். ஆனால் அவர்கள் சில காரணங்களால் தமிழில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 


இதனடிப்படையில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக அசின் வலம் வந்தார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். அப்படி இவர் தமிழில் நடித்த கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, தசாவதாரம் போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.


பின்பு ஏ.ஆர் முருகதாஸின் ஹிந்தி ரீமேக் ஆன கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்றார். அதன் பின் அங்கே சில படங்களில் நடித்த பிறகு அங்கு ஒருவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.


அடுத்ததாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா பால். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவும் அமைந்தது. 


பின்பு இவருடைய நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு "ஆடை" திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் இனிமேல் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு மற்ற மொழி படங்களில் நடிக்கச் சென்று விட்டார்.


அதேபோல் தமிழின் வாரிசு நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் முதலில் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலம் ஆன பிறகு தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். 


இவர் நடித்த அனைத்து படங்களுமே முன்னணி ஹீரோக்களுடன் தான். பிறகு இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.  தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறார். ஆனால் தெலுங்கில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் அஞ்சலி. இவர் நடிக்கும் படங்களில் பொதுவாகவே இவருடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமாகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்திருப்பார். 


சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். அத்துடன் இவருடைய மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டது. இதனால் கடந்த வருடமாகவே தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.


சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாளத்தையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் மிக கவர்ந்தது. 


இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவருடைய நடனத்திற்கு பெரிம் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனாலும் இவர் தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.


Advertisement

Advertisement