• Jul 25 2025

ஊதா கலரில் கவர்ச்சி காட்டிய திஷா பதானி; எல்லைமீறிய போஷால் திணறும் ரசிகர்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. இவர் தன்னுடைய ஸ்லிம் பிட் லுக்கில் எப்போதும் நல்ல ஸ்ட்ரக்சர் அழகை காட்டி திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார். 

 

அந்தவகையில் இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான 'லோஃபர்' என்ற படத்தின் மூலம் தான் திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கமாக கவர்ந்தார். 


மேலும் தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வரும் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதன் காரணமாக சில நடிகர்களுடன் நெருக்கமாக பழகி காதல் சர்ச்சையிலும் சிக்கி இருந்தார்.


அத்தோடு தமிழில் நடிகர் சூர்யாவின் 42-ஆவது படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு படங்களில் எப்போதுமே பிசியாக இருந்து வரும் திஷா பதானி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார்.


அதில் எப்போதுமே தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அத்தோடு கிளாமர் ஆடைகளை அணிந்து சிலவேளைகளில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தும் வருகிறார்.அந்தவகையில் தற்போதும் உச்சக்கட்ட கிளாமரில் படுமோசமாக ஆடையணிந்து எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement