• Jul 24 2025

முரட்டு சிங்கிளுக்கு வந்த சோதனை - நடிகர் விஷாலுடன் நடித்து கிசுகிசுவில் வசமாக சிக்கிய நடிகைகள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

முரட்டு சிங்கிளாக வலம் வந்த நடிகர் விஷால், சண்டக்கோழி 1 மற்றும் 2, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அண்மையில் இவர் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும்,லத்தி என அடுத்தடுத்த படங்கள் தோல்விப்படங்களாக அமைந்து விட்டன.


தற்போது விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். டைம் டிராவலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகி ரித்து வர்மா நடித்துள்ளார்.மேலும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் அடுத்த மாதம் 28ந் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார். முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகருக்கு எப்போது திருமணம் என பலரும் கேட்டு வருகின்றனர். நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் இளம் நடிகையான லஷ்மி மேனன் தமிழில் விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இந்த படத்தில் இவர்களின் கெமிஸ்டிரி பக்கவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

அதே போல சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரை விஷால் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் இது வரை ஜோடியாக நடித்தது இல்லை. சண்டைக்கோழி 2 படத்தில் கூட வரலட்சுமி வில்லியாகத்தான் நடித்திருந்தார். இருந்த போதும் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


Advertisement

Advertisement