• Jul 25 2025

நடிகையின் காலை பிடித்த சூர்யா பட இயக்குனர்...கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.


மேலும் இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.


மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.


தற்போது இவரின் மவுசு குறைந்துவிட்டதால், முன்னணி நடிகர்களை விட்டுவிட்டு, கவர்ச்சி நடிகைகளை வைத்து ஆபாச படங்களை இயக்கும் லெவலுக்கு சென்றுவிட்டார். அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேக்கட், கிளைமாக்ஸ், காட் செக்ஸ் டுரூத் போன்ற அடல்ட் கண்டெண்ட் படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்நிலையில் டேஞ்சரஸ் படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகை அஷு ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ராம் கோபால் வர்மா. அந்த வீடியோவில் நடிகை அஷு ரெட்டியின் காலை பிடித்து தடவுவது, முத்தம் கொடுப்பது என ராம் கோபால் செய்யும் கன்றாவி வேலைகளை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement