• Jul 24 2025

தெறி படத்தை ரீமேக் செய்தால் செத்துவிடுவேன்- பிரபல தெலுங்கு நடிகருக்கு ரசிகை எழுதிய தற்கொலை கடிதம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெறி.இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக நடிகர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.இதனால் இப்படத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

அதன்படி இப்படம் ரீமேக் செய்வது குறித்து பவன் கல்யாணின் ரசிகை திவ்ய ஸ்ரீ என்பவர் தற்கொலை கடிதம் எழுதியுள்ளார். அதில்  திவ்ய ஸ்ரீ கூறியிருப்பதாவது, நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியது இல்லை. அப்படி இருக்கும்போது தற்கொலை கடிதம் எழுதுவேன் என கனவிலும் நினைத்தது இல்லை சார். தெறி படம் ஒரு ரீமேக் என்று எனக்கு தெரிய வந்ததால் இந்த கடிதத்தை எழுத வேண்டியிருக்கிறது என்றார்.


மேலும் என் சாவை பார்த்த பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன். ஏற்கனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு நேரத்தில் டிவியில் தெறி படம் ஒளிபரப்பாகி வருகிறது. தயவு செய்து இந்த படத்தை கைவிடுங்கள் சார். என் சாவுக்கு காரணம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் குழு, இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ஆகியோர் தான். ரசிகர்களின் உணர்ச்சியுடன் விளையாடாதீர்கள் பவன் கல்யாண் என்றார்.


திவ்ய ஸ்ரீ எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வந்துவிட்டது. அதை பலரும் ரீட்வீட் செய்து வருகிறார்கள். தெறி படத்தை ரீமேக் செய்யக் கூடாது என்று ஹரிஷ் ஷங்கரை பவன் கல்யாண் ரசிகர்கள் விளாசுவதுடன், கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார்கள். பவன் கல்யாண் ரீமேக்குகளில் அல்ல மாறாக ஒரிஜினல் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement