• Jul 26 2025

என் மகளை பணத்துக்காக கொன்னுட்டாங்க.. காதலன் மீது பரபரப்பு புகாரை முன்வைத்த நடிகையின் தாயார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

போஜ்புரி படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஆகான்ஷா துபே. இவர் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு படப்பிடிப்புக்காக சென்றார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் இழப்பு திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில் அவரின் தாயாரான மது துபே கூறியிருப்பதாவது "போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரின் சகோதரர் சஞ்சய் சிங் தான் என் மகளின் தற்கொலைக்கு காரணம். அதாவது என் மகள் செய்த வேலைக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் பணம் கொடுக்கவில்லை. நிறைய பணம் வர வேண்டியிருக்கிறது. மார்ச் 21-ஆம் தேதி சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் ஆகான்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.


அந்த விடயத்தை ஆகான்ஷா எனக்கு போன் செய்து கூறினார்" என்றார். அதுமட்டுமல்லாது பண விஷயத்திற்காக ஆகான்ஷாவை கொலை செய்துவிடுவதாக சமர் சிங் மிரட்டினார் என்கிறார்கள் குடும்பத்தார். மேலும் சமர் சிங்கும், சஞ்சயும் திட்டம்போட்டு ஆகான்ஷாவை கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதனையடுத்து ஆகான்ஷாவின் மரணம் தொடர்பாக சமர் சிங் மற்றும் சஞ்சய் சிங் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆகான்ஷா துபேவும், சமர் சிங்கும் காதலித்து வந்தார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement