• Jul 25 2025

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, தெலுங்கு திரையுலகம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்  நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

அத்தோடு இதுவரை தமிழில் இரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு ராஷ்மிகா மந்தனாவிற்கும் கிடைத்து வருகின்றது.


தென்னிந்தியாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுள்ள ராஷ்மிகா தொடர்ந்து 3 படங்களை அங்கு கமிட் செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 125 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த தகவலை, சென்சார் குழு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி Boy Friends குறித்தும் இதில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்துள்ளார். 



Advertisement

Advertisement