• Jul 25 2025

காதலர் தினத்தில் வேறொரு நடிகருக்கு ரோஸ் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய அதிதி.. அப்போ சித்தார்த் நிலைமை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களின் வாயிலாக ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை அதிதி ராவ். அதேபோல் 'பாய்ஸ், தீயா வேலை செய்யணும் குமார், ஜில் ஜங் ஜக்' போன்ற படங்களின் வாயிலாக ரசிகர்களைக் கொள்ளை அடித்தவர் சித்தார்த்.


முன்னணிப் பிரபலங்களாகத் திகழ்ந்து வருகின்ற அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 'பிரின்சஸ் ஆஃப் ஹார்ட்டுக்கு ஹேப்பி பர்த்டே' என கடந்த ஆண்டு அதிதியின் பிறந்தநாளுக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அத்தோடு இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 


இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அதிதி ராவ் சித்தார்த்தை விடுத்து இன்னொரு பிரபல நடிகருக்கு ரோஸ் கொடுத்திருப்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு சித்தார்த்துக்கு ரோஸ் கொடுப்பார் அதிதி என பார்த்தால், பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுத்து தனது காதலர் தின வாழ்த்துக்களை நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.  


மேலும் பழம்பெரும் பாலிவுட் நடிகரான தர்மேந்திரா விரைவில் Rocky Aur Rani Ki Prem Kahani படத்தின் வாயிலாக மீண்டும் பாலிவுட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த உள்ளார். இந்நிலையில், அந்தப் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் மூத்த நடிகருக்கு ரோஸ் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார்.


இவ்வாறு அதிதி ராவ் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ததும் முதல் ஆளாக நடிகர் சித்தார்த் தான் ரெண்டு ரெட் ஹார்ட்டீன் எமோஜிக்களை போட்டு கமெண்ட் போட்டுள்ளார். இருப்பினும் நம்ம ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா..? "பாவம் சித்தார்த்" எனக் கூறி சில நெட்டிசன்கள் அதிதி ராவின் இந்த போஸ்ட்டை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement