• Jul 25 2025

சிவகார்த்திகேயனின் சம்பளம் இவ்வளவா? தூக்கி எழுப்பிய மான் கராத்தே...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் மான் கராத்தே சிவகார்த்திகேயன் மற்றும்  ஹன்சிகா மோட்வானி, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஸ் போன்றவர்கள் நடித்திருந்தனர். 


இந்த திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் மதன் சம்பளமாக ரூபா 50 லட்சம் பேசி இருந்தாராம். இருந்த போதிலும் இந்த படம் ஹிட் ஆகி பலரது உள்ளத்திலும் இடம் பிடித்ததால் படம் ஆஹா ஓஹோ என்று  ஓட தொடங்கியது. 


இதனால் சிவகார்த்திகேயனுக்கு சொன்னதை விட அதிகமாக 1.5 கோடி ரூபா கொடுத்து அவரின் சம்பளத்தை 2 கோடியாக மாற்றினார். அது மட்டுமில்லாமல் ஆடி கார் ஒன்றும் பரிசாக கொடுத்துள்ளார். இப்படி பட்ட    தயாரிப்பாளரை சிவகார்த்திகேயன் மறந்து விட்டாரே? 


இருந்தாலும் தயாரிப்பாளர் மதன் கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு ஒரு தேதி தருமாறு கேட்டுள்ளார். ஆனாலும் சிவகார்த்திகேயனிடம் இருந்து இன்னும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement