• Jul 26 2025

அம்மா,தங்கை இருக்கும் போதே மார்பில் கை வைத்து அட்ஜஸ்ட்மென்ட்....இளம் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி மீடு என்கிற பெயரில் புகார் கூறி வருகிறார்கள். தற்போது மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத் அளித்திருக்கும் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிவின் பாலியின் Saturday Night என்ற படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் தான் மாளவிகா ஸ்ரீநாத். அவரை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க ஒரு ஆடிஷனுக்கு அழைத்து இருக்கிறார்கள்.

அதற்காக மாளவிகாவின் அம்மா, தங்கை என மூன்று பேரும் ஆடிஷனுக்கு சென்று இருக்கிறார்கள்.ஆடிஷன் ஒரு அறையில் நடந்த நிலையில், 'உன் முடி சரியாக இல்லை, அந்த ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று சரி செய்துவிட்டு வா' என அனுப்பி இருக்கிறார் அந்த நபர்.

மாளவிகா உள்ளே சென்றதும் அந்த நபர் பின்னால் வந்து கட்டிபிடித்துக் கொண்டாராம். ஷாக் ஆன நடிகை அவரை தள்ளிவிட முயன்றும் முடியவில்லையாம். "நீ மனது வைத்தால் லேடி சூப்பர்ஸ்டார் மகளாக நடிக்கும் வாய்ப்பை உனக்கே தருகிறேன். 10 நிமிடம் உன் அம்மா,தங்கையை வெளியில் அனுப்பிவிட்டு உள்ளே இரு" என அந்த நபர் கூறினாராம்.

அங்கிருந்த கேமராவை மாளவிகா தள்ளிவிட முயற்சித்து இருக்கிறார், அப்போது அந்த நபரின் கவனம் சிதற, நடிகை தப்பித்து வெளியில் வந்திருக்கிறார்.

அந்த நபருக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தற்போது தான் எனக்கு தெரியவந்திருக்கிறது என மாளவிகா அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement