• Jul 25 2025

இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் கதாநாயகன்களாகும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிரூத்- வாவ் இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் லோகேஷின் ஸ்டைலில் கேங்ஸ்டர் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த ஆச்சரியமே தாங்கவில்லை எனில், அவருடன் இசையமைப்பாளர் அனிரூத்தும் இணைந்து நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. பல தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு சண்டை காட்சி அமைத்தவர்கள் அன்பு – அறிவு. இவர்கள் இரட்டையர்கள். கேஜிஎப், விக்ரம் ஆகிய படங்களுக்கும் இவர்கள்தான் சண்டைக்காட்சி அமைத்தனர்.


இவர்கள் இருவரும் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளனர். அவர் இயக்கும் படத்தில்தான் லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் இணைந்து நடிக்கவுள்ளனராம். தொடர்ந்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் எப்படி நேரம் ஒதுக்கி நடிப்பார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவரையும், அனிரூத்தையும் இணைந்து திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாகத்தான் இருக்கிறார்கள்.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கு அனிரூத் இசையமைத்தார். தற்போது லியோ படத்திற்கும் அனிரூத்துதான் இசையமைக்கவுள்ளாராம். எனவே, இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement