• Jul 26 2025

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ADK...பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீர் வெளியேற்றமா... நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஒரு போட்டியாளரான ADK  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

 பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 75 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

 இதில் இலங்கையில் இருந்து ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ADK.2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலமாக உலகமெங்கும் பேமஸ் ஆனார். பின்னர் தினேஷ் கனகரத்தினம் என்ற பெயரை ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (ADK) என்று மாற்றிக் கொண்டார்.

முதன் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனியின் இசையில் பாடினார். மேலும் இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் சினிமா பாடலும் அதுவே.

 இதன் பின்னர் பல பாடல்கள் பாடும் அவருக்கு கிடைத்தது. அச்சம் என்பது படத்தில் சோக்காலி பாடல், கடல் படத்தில் மகுடி மகுடி, ரஜினி முருகனில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா போன்ற பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. சில பாடல்களை தனியாகவும், சில பாடல்களை இணைந்தும் பாடியுள்ளார் ஏடிகே. 

இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக்பாஸ்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.எனினும்  தற்போது பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் ADK. அதில் மற்றொரு போட்டியாளராக இருக்கும் மைனா நந்தினியின் சொந்த மாமா மகனாவார்.

ஆரம்பம் முதலே ஏடிகே ஒரு சர்ச்சையான போட்டியாளராக இருந்து வந்தார். மேலும் அவரை யாரவது குற்றம் சொன்னால் அவர்களிடம் சென்று சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

மேலும் இவருக்கும் அசீமுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

இவ்வாறுஇருக்கையில்  விளையாடி கொண்டிருந்த போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி காரில் ஏறி மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் ADK. அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை. விரைவில் குணமடைந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா? இல்லை அப்படியே வெளியேறிவிடுவாரா என்பது தெரியவில்லை.பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement