• Jul 25 2025

ப்ளூ சட்டை மாறன் போன்றவர்களுக்கு அஜித் கூறிய செமையான பதில்..கடைசியில் இப்படி கூறிவிட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்துவிட்டது. பல ஏற்ற இறங்கங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென  தனி  இடத்தை பிடித்து இருக்கிறார் அவர். ரசிகர் மன்றங்களை அவர் களைத்துவிட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

சோசியல்மீடியாவில் எப்போதும் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறும் சண்டையால் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகும்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் நடிகைகளை பற்றி தவறாக எழுதும் கிசுகிசுக்கள், நெகடிவ் விமர்சனங்கள், ட்ரோல்கள் என அதிகம் எழுகின்றன.

அஜித் இதைப்பற்றி எல்லாம் சொன்ன கமெண்ட் என்ன என அவரது பைக் ட்ரிப்பில் உடன் சென்ற நபர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

அத்தோடு இப்படி செய்பவர்களை நிறுத்த சொல்வது மாமிசம் விற்கும் கடைக்காரரிடம் விலங்குகளை கொல்லாதீர்கள் என சொல்வது போன்றது தான். அவரிடம் கேட்டால் "அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள், பொருளுக்கு மார்க்கெட் இருக்கிறது, நான் செய்யவில்லை என்றாலும் இன்னொருவர் நிச்சயம் செய்யத்தான்போகிறார்" என பதில் சொல்வார்கள்.

"Yellow ஜர்னலிசம், ட்ரோல்கள், நெகடிவ் விமர்சனங்கள் போன்றவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். அதை வைத்து வருமானம் ஈட்டி அந்த நபரின் குடும்பத்தை நடத்த முடியும் என்றால், இன்னொருவரது வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்னையும் வரவில்லை என்றால்.. இதை ஏற்றுக்கொள்ளலாம்" என அஜித் கூறியுள்ளாராம்.




Advertisement

Advertisement