• Jul 25 2025

சிவகாமியை சந்தோஷப்படுத்திய சந்தியா கௌரி மேடம் கொடுத்த அட்வைஸ்- ரொமான்ஸ் மூட்டில் இருக்கும் சரவணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஜோதி சரவணனுக்கு வீடியோ கால் போட்டு சந்தியா படகு போட்டியில் கலந்து பங்கேற்றத்தை காட்ட சிவகாமி கடவுளிடம் சந்தியா ஜெயிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.அதற்கேற்றார் போல சந்தியா படகு போட்டியில் விறுவிறுப்பாக பங்கேற்கிறார். 

இந்த பக்கம் பூசாரி ஒரே நாள்ல ஒருத்தருக்கு இவ்வளவு பேர் அர்ச்சனை பண்ணி நான் பார்த்ததே இல்லை என சொல்லி சந்தியா கண்டிப்பாக ஜெயிப்பாங்க என சொல்கிறார். பிறகு சந்தியா போட்டியில் ஜெயிக்க ஜோதி அந்த விஷயத்தை சரவணன் எனக்கு தெரியப்படுத்த எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


பிறகு பூசாரி தீர்த்தத்தை கொடுத்து சிவகாமியின் விரதத்தை முடித்து வைக்க சொல்கிறார். சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட அப்போது சிவகாமி போன் எடுத்துப் பேச நான் ஜெயிச்சுட்டேன்என சந்தோஷமாக சந்தியா சொல்ல சிவகாமி சந்தோஷப்படுகிறார். 


பிறகு சந்தியா தன்னுடைய அப்பா அம்மாவை நினைத்து கண்கலங்க கௌரி மேடம் அதை பார்த்து உனக்குள்ள இருக்கிற திறமையை விட நீ உன்னுடைய குடும்பத்திற்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிற என கூறுகிறார்.ஒரு நாள் உன்னுடைய குடும்பமே உனக்கு பாரமாகிவிடும் என சொல்ல ஒரு நாளும் அப்படியாகாது என சந்தியா கூறுகிறார். பிறகு சந்தியாகும் சரவணனும் ஃபோனில் ரொமான்ஸாக பேசிக்கொள்கின்றனர். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement