• Jul 25 2025

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகர்- வெயிட்டிங் இஸ் ஒவர்!- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் ஆரம்ப காலம் முதல் தற்பொழுது வரை சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முதலிடம் வகிக்கின்றது.இதில் நடித்து வரும் பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது பயணத்தை சின்னத்திரையில் தொடங்கியவர் இயக்குநர் திருமுருகன். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும், பரிமாணத்தை தொடங்கியுள்ள இவர் நாதஸ்வரம் சீரியலில் கோபியாக நடித்து பலரது பாராட்டைப் பெற்றார்.


கிட்டத்தட்ட, சமீபத்தில் ஒளிபரப்பாகி முடிந்த கல்யாண வீடு சீரியலுக்கு பின் இவருக்கான என்ட்ரி சின்னத்திரையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சின்னத்திரை நடிகரிடம், இது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது திருமுருகன் மீண்டும் எப்போது சீரியலில் கம் பேக் கொடுப்பார் என கேட்டார்.


அதற்கு பதில் அளித்த அந்த பிரபலம், இவரின் புது சீரியலுக்கான பிரபலங்கள் தேர்வு முடிந்து விட்டதாகவும், ஷூட்டிங் மட்டும் இன்னும் ஆரம்பிக்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். இதற்கான பணிகள் இன்று இரண்டு மாதத்திற்குள் முடிந்தது அவரது புது சீரியல் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement