• Jul 24 2025

பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு.. துணிவு லிரிக்ஸ் லீக் ஆகிடுச்சு.. சும்மா தீயாக உள்ளதே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 'சில்லா சில்லா' என்றதுமே சில்லா இருக்கும் என எதிர்பார்த்தால் செம ஃபயராக அதன் லிரிக்ஸ் இருக்கிறது என சமூக வலைதளங்களில் தற்போது லீக் ஆகியுள்ள துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ஸ் உரக்க சொல்லி வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள துணிவு படத்தின் 'சில்லா சில்லா' இன்னும் சற்று நேரத்தில் வெளியாக போகிறது.#Thunivufirstsingle மற்றும் #ChillaChilla ஹாஷ்டேக்குகளை போட்டு துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகப் போவதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


அத்தோடு புயல் பாதிப்பை எல்லாம் தாண்டி பெரும் புயலாக துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சமூகவலைத்தளத்தில்  தெறிக்கவிட ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் மற்றும் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பாடல்கள் சமூகவலைத்தளத்தில்  லீக் ஆகி டிரெண்டாகின. இந்நிலையில், இன்று மாலை வெளியாகவுள்ள சில்லா சில்லா பாடலின் சூப்பரான லிரிக்ஸும் தற்போது கசிந்து அஜித் ரசிகர்களை அட்டம் போட வைத்துள்ளது.


அஜித் பட பாடல்களில் எப்போதுமே தத்துவம் மற்றும் பஞ்ச் லைன்கள் தான் லிரிக்ஸாக இருக்கும் என்பது தெரிந்தது தான். அதற்கு கேற்றார்போல பாடலாசிரியர் வைசாக் வரிகளில் உருவாகியுள்ள பாடல் வரிகள் கசிந்துள்ளன. "உள்ளுக்குள்ள ஃபயரு.. தெறிச்சு ஓடும் ஃபியரு.. பின்னாடி பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு" என ஆட்டம் போடும் தத்துவ வரிகளை எழுதியுள்ளார்.


வேதாளம் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் அஜித் ரசிகர்களை தாண்டி அனைத்து ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது. அத்தோடு திருமண வீடுகள் தொடங்கி, பார்ட்டி, பப் என அனைத்து இடங்களிலும் அந்த பாடல் இன்றும் அமர்க்களம் செய்து வரும் நிலையில், சில்லா சில்லா பாடல் அடுத்த ஆலுமா டோலுமாவாக மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Advertisement

Advertisement