• Jul 25 2025

அடுத்த காதல் வொர்க்கவுட் ஆகிடுச்சா..ஜனனி கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி அந்த விடயத்தை கூறிய போட்டியாளர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் தற்போது மொக்கையாக சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது வீட்டிற்கு வெளியே இருப்பது தான்.

அந்த வகையில் அசல் கோலார் நிகழ்ச்சியில் பெண்களிடம் ஏதாவது ஒரு கோளாறு செய்து கொண்டு கன்டென்ட் கொடுத்து வந்தார். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பியும் எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஆனால் குறைந்த ஓட்டுகளை பெற்று அவர் எலிமினேட் செய்யப்பட்டார். எனினும் அதே போன்று வாயாடி மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி ஆகியோரும் நிகழ்ச்சியில் பரபரப்பை கிளம்பி வந்தனர்.

குயின்சி விளையாட்டில் அதிக அளவில் சுவாரசியம் காட்டவில்லை என்றாலும் கதிரவனுடன் அவர் செய்த கலாட்டாக்கள் ரசிக்கும் படி இருந்தது. மேலும் இப்படி கன்டென்ட் கொடுக்கும் அனைவரையும் கழுத்தை பிடித்து துரத்திவிட்ட விஜய் டிவி தற்போது அடுத்த கன்டென்ட்டுக்கு திண்டாடி வருகின்றது. அதனால் விஜய் டிவி பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் ஜோடியை உருவாக்கியுள்ளது.

அத்தோடு  இவ்வளவு நாள் வீட்டுக்குள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ராம் இந்த வாரம் ஓரளவுக்கு பர்பாமென்ஸ் செய்து வருகிறார். அதிலும் ரகுவரன் கெட்டப் போட்டிருக்கும் அவரின் மேனரிசம் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியில் தனியாக அமர்ந்திருந்த ஜனனியிடம் அவர் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.


அப்போது அவர் ஜனனி சோகமாக இருந்ததை குறிப்பிட்டு பேசினார். எனினும் அதைக் கேட்டு நான் வடிவாக இல்லையா, அதாவது அழகாக இல்லையா என்று ஜனனி குறைபட்டுக் கொண்டார். உடனே அவரை சமாதானம் செய்யும் பொருட்டு ராம் நீ ரொம்ப வடிவா இருந்தாய் என்று கூறி கன்னத்தை வேறு பிடித்து செல்லமாக கிள்ளினார். இதனால் குஷியான ஜனனி வெட்கப்பட்டுக் கொண்டே ஒரு சிரிப்பு சிரித்தார்.

மேலும் இதை பார்க்கும் போதே இவ்வளவு நாள் மிக்சர் சாப்பிட்டு வந்த ராம் மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறந்து விட்டது என்று நன்றாக தெரிகிறது. அதனால் இதை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் சில வாரங்கள் ஓட்டி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.அத்தோடு அடுத்த காதல் பிக்பாஸ் வீட்டுக்குள் மலர்ந்துவிட்டதா எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு இவர்களின் மூலம் ஒரு புது கன்டென்ட் கிடைத்துவிட்டது என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இது தொடருமா..இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறுஇருக்கையில் இந்த வார எலிமினேசன் லிஸ்டில் ராம் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement