• Jul 24 2025

மனோபாலாவைத் தொடர்ந்து.... பாரதிராஜா வீட்டில் நிகழ்ந்த மரணம்... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக இடம்பெற்று வரும் தொடர் மரணங்களால் திரைத்துறையே சோகத்தில் மூழ்கி உள்ளது. அதாவது காமெடி நடிகர்கள் விவேக், பாண்டு, மயில்சாமி மற்றும் பாடகி வாணி ஜெயராம் என ஒவ்வொரு சினிமாப் பிரபலங்களாக உயிர் துறந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், நேற்றைய தினம் இறந்த மனோபாலாவின் மறைவு மீண்டும் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் மீள முடியாத கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இவ்வாறாக மனோபாலா மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நேற்றிரவு நடிகர் சரத்பாபு மரணம் அடைந்தார் என தகவல் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. அதன்பிறகு சரத்பாபு மரணம் என வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.


இதனையடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது பாரதிராஜா வீட்டிலும் ஓர் இழப்பு நிகழ்ந்துள்ளது. பாரதி ராஜாவின் சகோதரி பாரதியின் கணவர் உடல்நல குறைபாட்டால் தேனியில் உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் ரசிகர்கள் மேலும் வருத்தமடைந்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் பாரதி ராஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement