• Jul 24 2025

"நடிகர்களுக்கு எமனாக மாறும் சரக்கு" - அஞ்சலி செலுத்திய பின் பகீர் கிளப்பிய மன்சூர் அலி கான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

69 வயதான மனோபாலா, கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 உட்பட சில படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோபாலா நேற்று காலமானார். இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தளபதி விஜய்யும் நடிகர் மனோபாலா உடலுக்கு அவரது இல்லம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.இவரைப் போல விஜய் சேதுபதி சூரி சரத்குமார் சமுத்திரக்கனி எம்.எஸ் பாஸ்கர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அத்தோடு இன்றைய தினம் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்படவும் உள்ளது.


இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மனோபாலாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் பத்திரிகையாளரை சந்தித்து அவர் கூறியதாவது அற்புதமான மனிதன் இவர். இவர் திரையிலுள்ள அனைத்து சங்கங்களிலும் அங்கம் வகித்தவர்.அமைதியான சைவ உணவு சாப்பிட்டாலும் நண்பர்களுக்கெல்லாம் நல்ல உணவு வழங்கி இருக்கிறார்.


எங்களுடைய மனைவியை விட வத்தக்குழம்பு நன்றாக வைப்பார். திரையுலகில் பலருக்கு சரக்கு எமனாக இருந்திருக்கின்றது. சரக்கு அடிக்க கூடாது சரக்கடித்தால் டைடிஸ் சாப்பிட வேண்டும் இவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement