• Jul 25 2025

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து விஜய்க்கும் கதை சொன்ன மாரி செல்வராஜ்- தளபதி கொடுத்த ரியாக்ஷன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் 2018ம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மாரி செல்வராஜ். இதனை அடுத்து  பேரன்பு, கர்ணன் போன்ற படங்களை வெற்றி கண்டார். இவரது இயக்கத்தில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.விஜய்யை நேரில் சந்தித்து ஒரு கதை கூறினேன், கதையை கேட்டுவிட்டு அவர் கமர்ஷியல் விஷயம் இல்லையா.


எனக்கு இப்படியொரு கதையா என சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு சென்றுவிட்டாராம் விஜய். இதனை ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்,மேலும் மாமன்னன் படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.


இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இத்திரைப்படத்தில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் முற்றும் மாறுபட்டு நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement