• Jul 24 2025

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி... கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

உலகில் தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறான பாடகர்களில் ஒருவர் தான் மடோனா. இவர் 'லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ்' என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.

இவரைக் குயின் ஆஃப் பாப் எனக் கூறி 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மடோனா பாடலாசிரியர் மட்டுமல்லாது பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவதும் தனது திறமைகளை நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை சொந்தமாக்கி இருக்கின்றார். அத்தோடு உலகளவில் 300 மில்லியன் இசைத் தட்டுகளை விற்ற ஒரே பிரபல பாடகி என்ற பெயரையும் பெற்று, கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பாப் பாடகியான மடோனா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இருப்பினும் அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கவனிப்பில் இருப்பார் எனவும் கூறப்பட்டுகின்றது.

Advertisement

Advertisement