• Jul 23 2025

விஜய்யைத் தொடர்ந்து சென்னை ஏர்போட்டிற்கு மாஸாக என்ட்ரி கொடுத்த அஜித்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், பயணம் செய்வதில் அலாதி பிரியம் உள்ளவர். அஜித் குமார் தனது இருசக்கர வாகனத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார். 

லடாக், சிக்கிம், சூரத், மும்பை, புனே, கவுகாத்தி என இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குமே இருசக்கர வாகனத்தில் நடிகர் அஜித் குமார் பயணம் செய்துள்ளார்.நடிகர் அஜித் குமாரின் பயணத்தை பலரும் புகைப்படம் எடுத்து வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.


 மிக கடினமான கால நிலைகளில் கூட அஜித் பயணம் செய்துள்ளார்.குறிப்பாக நேபாளத்தில் அஜித் குமாரின் பயணம் பெரிய அளவில் பேசப்படுகிறது.கடுமையான நிலப்பரப்பு உடைய அந்த மாநிலத்தில் அஜித் பயணம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இது தவிர தனது நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் இவர் அடுத்தாக விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கே ரசிகர்கள் அவரை வைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.அண்மையில் விஜய்யும் சென்னை ஏர்போட்டிற்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது




Advertisement

Advertisement