• Sep 09 2025

சைலன்ட் ஆக ரெடியாகும் அஜித்தின் இன்னொரு படம் - அப்போ விடமுயற்சி படத்தின் நிலைமை என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வந்தாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கியபாடில்லை.

நடிகர் அஜித்தும் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருகிறார். அவர் விடாமுயற்சி படத்துக்காக உடல் எடையை குறைக்க தான் வெளிநாடு சென்று வருவதாக கூறப்பட்டாலும், அவர் சைடு கேப்பில் இன்னொரு முக்கிய வேலையையும் பார்த்து வருகிறாராம். நடிகர் அஜித் உலக பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட பயணத்தை வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளார் அஜித்.

நடிகர் அஜித் தன்னுடைய உலக பைக் சுற்றுலா முழுவதையும் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதனை அவர் ஆவணப்படமாக எடுக்க இருப்பதாகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதற்கான உரிமையை வாங்கி இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. 

இருப்பினும் பின்னர் அதுகுறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, நடிகர் அஜித் அந்த ஆவணப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறாராம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆவணப்பட பணிகள் தொடர்பாக தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அவர் தொடங்கி இருக்கும் ஏகே மோட்டோ ரைடு என்கிற பைக் சுற்றுலா கம்பெனியின் விளம்பரத்திற்காகவும் தனது பைக் பயண வீடியோவை அஜித் பயன்படுத்த பிளான் போட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் விரைவில் அஜித்தின் ஆவணப்படமோ அல்லது விளம்பரமோ வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement