• Jul 25 2025

அட பாவமே லவ் -ஆல் தான் சினிமா வாய்ப்பே போச்சா?...நடிகை ஷிவானி என்ன சொன்னாரு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்தவர் ஷிவானி நாராயணன். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் இன்னும் அதிகம் பாப்புலர் ஆனார்.

ஆனால் அந்த ஷோவுக்கு பிறகு சினிமாவில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக மிக சிறிய ரோலில் நடித்து இருந்தார்.

சின்னத்திரையில் எனக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிட்டது, ஆனால் சினிமாவில் அவ்ளோ ஈசியாக அமையவில்லை, எனக்கு சினிமாவில் எந்த background இல்லாததும் ஒரு காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் ஷிவானி.

காதலால் உங்கள் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா என அவரது பிக் பாஸ் காதல் பற்றி மறைமுகமாக கேட்டதற்கு "எனது லவ் தான் என் பயணத்தை தொடங்கி வைத்தது. சினிமா மீதான எனது காதல் தான் அது" என மழுப்பலாக பதில் கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement