• Jul 26 2025

நிக்சன் மீது காதல் வயப்பட்ட ஐஷூ- கடும் கோபத்தில் இருக்கும் அவரது பெற்றோர்- அப்போ இன்னொரு சம்பவம் இருக்கு..

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.இதுவரை நிகழ்ச்சியிருந்து 4 போட்டியாளர்கள் வௌியேறியுள்ளனர். 5 போட்டியாளர்கள் வைல்ட்காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

இதில்போட்டியாளராக பங்கேற்றிருப்பவர்களில் ஐஷூவும் ஒருவர். இவர் ஊட்டியை சேர்ந்தவராவார். இவரது பெற்றோர் ஊட்டியில் ஏடிஎஸ் என்கிற புகழ்பெற்ற டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர் பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி நடனமாடி இருக்கின்றார்.


ஐஷூ முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். அவரது விளையாட்டு முறை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கும் உணவு ஊட்டி விடுவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர்.

சோசியல் மீடியாவிலேயே இவர்களது காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், ஐஷூவின் வீட்டிலும் இதனை அவர்கள் பெற்றோர் எதிர்த்து வருவது தெரியவந்துள்ளது. ஐஷூ பிக்பாஸுக்கு நுழைந்தது முதல் தன் மகளுக்காக ஐஷூவின் அம்மா ஷைஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆதரவு திரட்டி வந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஐஷூ குறித்து எந்த ஒரு பதிவையும் போடாமல் உள்ளார் ஷைஜி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஐஷூவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தான் அவர்கள் எந்தவித பதிவும் போடாமல் இருக்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement