• Jul 26 2025

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பாவம் கணேசன் சீரியல் நடிகை- அடடே இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?....

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த சீரியல் தான் பாவம் கணேசன். இதில் கலக்கப்போவது யாரு நவீன் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடைய தங்கை யமுனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ஷிமோனா ஜேம்ஸ்.


கோயம்புத்தூரை சேர்ந்த இவர், ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்த இவர் கடந்த செப்டம்பர் மாதம், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் நடிகை ஷிமோனாவிற்கும் அவரின் காதலருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.


விஜய் டிவி சீரியலில் நடிப்பதற்கு முன்னர் ஷிமோனா சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியலில் நடித்தார். இருப்பினும் இருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுபாவம் கணேசன் சீரியல் தான்.


இவர் தற்பொழுத சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில், ஷிமோனாவுக்கும் இவரின் காதலர் கிரண் நேதனல் என்பவருக்கும் கிறிஸ்தவ முறைப்படம் திருமணம் நடந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த இளம் ஜோடிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது




Advertisement

Advertisement