• Jul 25 2025

டபுள் சந்தோஷத்தில் ஐஸ்வர்யா ராய்... குடும்பத்தோடு சூப்பர் நியூஸ் சொன்ன அபிஷேக் பச்சன் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய், தமிழில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.மேலும்  இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும் இவர் திருமணத்துக்கு பின் ராவணன், எந்திரன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று தமிழ் படங்களில் தான் நடித்தார்.

இதில் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வேறலெவல் ஹிட் ஆனது. இப்படத்தில் நந்தினி என்கிற பவர்புல்லான வில்லத்தனம் வாய்ந்த கேரக்டரில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய். தமிழில் அவருக்கு இது தரமான கம்பேக் திரைப்படமாக அமைந்தது.


பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளாராம். எனினும் அதன்படி இவர் வாங்கியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் என்கிற கபடி அணி, சமீபத்தில் நடந்த முடிந்த புரோ கபடி லீக்கின் இறுதிப்போட்டியில் புனேரி பல்டன்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.


இதனால் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அந்த அணி கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறை ஆகும். இறுதிப்போட்டி முடிந்ததும் தனது மகள் ஆராத்யாவுடன் இணைந்து தங்கள் அணியில் சிறப்பாக விளையாடிய அஜித்குமார் என்கிற வீரரை பாராட்டிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. மேலும் அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகியோர் கோப்பையுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement