• Jul 25 2025

நம்மை தூக்கிப் போட்டு மிதிக்கிறதுக்கு ஆளா இல்லை- செம கடுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் நாளைய தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.இப்படத்தில்  தீபா, லட்சுமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். கருணாகரன் இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் கவனம் ஈர்க்கிறார். படத்தில் அதிகமான கவனம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரின்மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த கவனத்தை மற்ற கேரக்டர்களுக்கும் கடத்த இயக்குநர் முற்படாதது ஆதங்கத்தையே ஏற்படுத்துகிறது. படத்திற்கு பலமாக அஜ்மலின் இசை அமைந்துள்ளது. சொப்பன சுந்தரி படம் நாளைய தினம் வெளியாகவுள்ள சூழலில், ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்தப் படத்தின் ட்ரெயிலரில் வெளியான கண்டிப்பா ரேப் பண்ணிடுங்க சார் என்ற டயலாக்கை பேச தான் மிகவும் யோசித்ததாகவும் ஆனால், இயக்குநர் தன்னை சமாதானப்படுத்தி பேச வைத்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது படத்துடன் சேர்த்து பார்க்கையில் அந்த டயலாக்கின் முக்கியத்துவம் தனக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நம்மை மேலே கைத்தூக்கி விடுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்றும் ஒன்றிரண்டு பேர் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் நம்மை தூக்கிப் போட்டு மிதிப்பதற்கு, கீழே போடுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள் என்றும் அதையெல்லாம் தாண்டி வளர்வதுதான் நமக்கான சவாலாக இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement