• Jul 24 2025

வெளிநாட்டில் வாட்ச் திருடிய சூர்யா- கண்டபடி திட்டிய சிவகுமார்- நீண்ட நாளுக்கு பின் வெளி வந்த ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் ரொம்பவே விமர்சனங்களை சந்தித்தவர். தற்பொழுது இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமின்றி கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகின்றார்.

சூர்யா நடித்ததிலேயே அவரது கேரியர் பெஸ்ட் என்று ஜெய் பீம் படத்தை சொல்லலாம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், ஒரு முன்னணி ஹீரோ இப்படி நடிப்பது ஆரோக்கியமான விஷயம் என சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


சூர்யா இப்போது தனது 42ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் உருவாகவிருக்கும் இப்படம்தான் அவரது கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் ஆகும். படத்தின் பெயர் ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.

 இந்நிலையில் வெளிநாட்டில் சூர்யா வாட்ச் திருடிய சம்பவம் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது சூர்யாவின் தம்பி கார்த்தி வெளிநாட்டில் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக சூர்யா தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ஷாப்பிங் சென்றபோது ஒரு ஃப்ளோர் முழுக்க வாட்ச்கள் இருந்திருக்கின்றன.


 வாட்ச்களின் விலை அதிகமாக இருந்ததால் ஒரு வாட்சை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாராம் சூர்யா. அறைக்கு வந்ததும் அதை கார்த்தியிடம் சூர்யா கூற; உடனடியாக கார்த்தி தனது தந்தை சிவக்குமாரிடம் சொல்லிவிட்டாராம். கடும் திட்டு விழுந்த பிறகு அடுத்த நாள் காலை மீண்டும் அதே கடைக்கு சென்ற சூர்யா யாருக்கும் தெரியாமல் வாட்ச் இருந்த இடத்தில் வைத்துவிட்டாராம். இதனை ஒரு மேடையில் சூர்யாவும், கார்த்தியும் பகிர்ந்திருந்தனர்.


Advertisement

Advertisement