• Jul 24 2025

பிரபல இளம் நடிகருடன் காதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... விரைவில் திருமணம்...? வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில்  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில்  தெரிவித்தனர்.

இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்தோடு குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றியவில்லை. இன்றுவரை இருவரும் பிரிந்து தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இருப்பினும் ஐஸ்வர்யா காதலிக்கும் அந்த இளம் நடிகர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அந்தவகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேசர்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. 


எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவது உண்மையா என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement