• Jul 24 2025

மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரிஸ்க் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயன்- அடடே இப்படித்தான் இருக்குமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு, கடைசியாக வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், எப்படியும் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குநர், மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'.  ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின், பிரமோஷன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது 

அதேபோல் இந்த படத்தில், இருந்து வெளியான சீன் ஆ... சீன்  ஆ...  பாடல் மற்றும் வண்ணாரப்பேட்டையில ஆகிய இரண்டு பாடல்கள்மே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.அதிதி ஷங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 


இப்படத்தின் முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சரிதா, சுனில், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுவதும் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளார்களாம். இந்த சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பினால் சிவகார்த்திகேயன் மிரட்டியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படத்தில் ஃபாண்டஸி கலந்த சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். 


Advertisement

Advertisement