• Jul 25 2025

கணவனைப் பிரிந்தாலும் 10 ஆண்டுகளாக இதை போஃலோ பண்ணும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- இவரோட சீக்ரெட் இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இதனால் இவருடைய படங்கள் மீது எதிர்பார்ப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். 


இரு பிள்ளைகளுக்காக இன்னும் விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஐஸ்வர்யா தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்கவுட் வீடியோ புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.


10 ஆண்டுகளாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிருத்தவில்லை என்று ஒரு பதிவினை போட்டுள்ளார். தி சீக்ரெட் என்ற புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது கூட படித்தவாறு செல்கிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement