• Jul 25 2025

எனக்கு விக்ரமன் என்றால் பிடிக்காது- முகத்துக்கு நேராகவே கூறிய தனலட்சுமி- பரபரப்பான விவாதம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய தினம்  தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி உள்ளிட்டோர் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் உள்ளே தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போட்டியாளர்களை பாராட்டியும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விக்ரமன் மற்றும் தனலட்சுமி ஆகியோரிடையே நடந்த உரையாடல் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.இதில் விக்ரமனிடம் கேள்வி ஒன்றை கேட்கும் தனலட்சுமி, "முதல் வாரத்தில் நான் கோபப்படுறப்ப, அதை மாத்திக்காதீங்க. வெளியுலகத்துக்கு தேவைன்னு நீங்க சொன்னீங்க. அது மத்தவங்க கிட்ட நான் கோபப்படும்போது உங்களுக்கு புடிச்சிருந்தது. ஆனா உங்ககிட்ட பண்றப்போ நீங்க சொன்னீங்க, இந்த பொண்ணு ரொம்ப Arrogant-ஆ இருக்கான்னு. ஏன் அந்த Opinion மாறுச்சு?" என தன்னுடைய கேள்வியை தனலட்சுமி முன் வைத்தார்.


இதற்கு விளக்கம் கொடுக்கும் விக்ரமன், "நான் கோபம்ன்னு சொன்னது ரௌத்திரத்தை தான். அது நியாயமான விஷயத்துக்கு வரணும். சம்பந்தமே இல்லாம நீங்க என்கிட்ட பண்ணப்ப அது ஒரு வெறுப்பா தான் தோணுச்சு எனக்கு. நீங்க என்கிட்ட கோவப்படணும்ன்னா நான் ஏதாச்சும் பண்ணி இருக்கணும்ல" என கூறினார். தொடர்ந்து பேசிய விக்ரமன், குறிப்பிட்ட ஒரு டாஸ்க்கிற்கு பிறகு என்னை அண்ணா என்று அழைக்கவில்லை என்றும் அசிம் உள்ளிட்டோரை அண்ணா என அழைத்ததாகவும், அது தன் மீது ஒரு பர்சனல் அட்டாக் இருப்பது போல் உணர வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் இறுதியில் பேசும் தனலட்சுமி, "எனக்கு வெளியே போனதுக்கப்புறம் விக்ரமன்னாலே புடிக்காதுன்னு தான் என் மைண்ட்ல இருந்துச்சு. அத நான் ஓப்பனாவே உங்ககிட்ட சொல்லிடுறேன். அது உங்களுக்கே தெரியும். அது வந்து பர்சனல் கிடையாது. நான் கேம் பொறுத்தவரைக்கும் எனக்கு விக்ரமன் பண்ணது புடிக்கலைன்னு தான் நான் சொல்லி இருக்கேன். முதல் வாரத்துக்கும் அடுத்த சில வாரத்துக்கு பிறகும் இருந்த வித்தியாசம் என்னனு எனக்கு தெரிஞ்சுக்கணும். அது தெரிஞ்சிடுச்சுன்னா எனக்கும் உங்களுக்கும் இருக்கிற பிரச்சனை முடிஞ்சுரும்ல" என கூறினார்.





Advertisement

Advertisement