• Jul 24 2025

பிரான்சில் அஜித் & ஷாலினியை போட்டோ எடுத்தது அந்த முக்கிய நபர் தானாம்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித். பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது.அத்தோடு  சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

இறுதியாக இவர் நடித்த திரைப்படம் தான் வலிமை.அதற்கு பிறகு இவர்  துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார்.அத்தோடு  பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குநராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.எனினும் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.



இவ்வாறுஇருக்கையில்  நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும் கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள கார் கண்ணாடியில் அஜித் & ஷாலினியின் மகன் ஆத்விக் அஜித்குமார் புகைப்படத்தை எடுப்பது போல உள்ளது. இதனால் இந்த புகைப்படத்தை எடுத்தது ஆத்விக் அஜித்குமார் தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.




Advertisement

Advertisement