• Jul 25 2025

திருமணத்திற்கு முன்பே அப்பாவான கவுதம் கார்த்திக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் இன்று நல்லபடியாக நடந்திருக்கிறது. இவ்வாறுஇருக்கையில்  கவுதம் கார்த்திக்கின் மகள் பற்றி பேசப்படுகிறது.

கவுதம் கார்த்திக் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் சேர்ந்து நடித்தபோது கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காதலாகி இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் எளிய உடை, மாலை தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. கை முழுக்க மருதாணி வைக்காமல் அந்த காலத்து பொட்டு டிசைன் வைத்திருக்கிறார் மஞ்சிமா. அத்தோடு அவர்கள் இவ்வளவு சிம்பிளாக இருப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது. அத்தோடு கடைசி வரை ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.

கவுதம் கார்த்திக்கிற்கு இன்று தான் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அவர் திருமணத்திற்கு முன்பே அப்பாவாகிவிட்டார். மேலும் அந்த டாடிஸ் லிட்டில் பிரின்சஸின் பெயர் லூனா. மஞ்சிமா மோகனுடானான காதலை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்வதற்கு முன்பு தான்  தனது  மகளான லூனாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கவுதம் கார்த்திக். தன் லிட்டில் பிரிசன்ஸுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்.


திரையுலக பிரபலங்கள் தங்கள் செல்லங்களை சொந்த பிள்ளைகள் போன்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அத்தோடு ஒரு நாய் அல்லது பூனையை வாங்கி நான் அம்மாவாகிவிட்டேன், அப்பாவாகிவிட்டேன் என்று திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கூறுகிறார்கள்.இவ்வாறுஇருக்கையில்  தான் ஒரு பூனைக்கு அப்பாவாகியிருக்கிறார் கவுதம் கார்த்திக். லூனா ரொம் க்யூட்டாக இருக்கிறாள் அண்ணா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு என் காதல் கதை ரொம்ப ஸ்பெஷல் எல்லாம் இல்லை என்று சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார் கவுதம் கார்த்திக். நான் காதலை சொன்னதுமே மஞ்சிமா பதில் அளிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் பதில் சொன்னார் என்றார். திருமணம் முடிந்த கையோடு புகைப்படங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்கள். எனினும் அதன்படி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திருமணமான அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்கள். இன்று மாலை அப்படி எந்த நிகழ்ச்சியும் நடக்காதென தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

Advertisement